ஆனந்தநகரில் அடிப்படை வசதிகள் இன்றி குடியிருப்போர் அவதி: நிதி இல்லை என கொடுவிலார்பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
தேனி: கொடுவிலார்பட்டி ஊராட்சி ஆனந்தநகரில் ரோடு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட நிதியில்லை என ஊராட்சி 10 ஆண்டுகளாக அலட்சியம் செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். தேனி ஒன்றியம், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 6வது வார்டு ஆனந்த்நகர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 வீடுகளில் 200க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகளான ரோடு, சாக்கடை வசதி இல்லாததால் பல இடங்களில் கழிவு நீர் தெருவில் செல்கிறது. இதனால் தினமும் இந்த பகுதியில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டினருடன் சண்டை போடும் நிலை தொடர்கிறது. ஊராட்சி சார்பில் தெருவின் உட்பகுதியில் சில வீடுகளுக்கு மட்டும் சிமென்ட் ரோடு, சாக்கடை வசதி ஏற்படுத்தி உள்ளனர். ஆனால், அந்த தெருவிற்கு செல்லும் பாதை, அருகில் உள்ள தெருவிற்கு இந்த வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை. இதற்காக சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக ரோடு அமைத்துதர கோரி ஊராட்சி அலுவலகம், யூனியன் அலுவலகம், கலெக்டர் அலுவலகங்களில் மனு அளித்தும் எந்த பயனும் ஏற்பட வில்லை. அதிகாரிகளிடம் எப்போது கேட்டாலும் ரோடு, சாக்கடை வசதி செய்ய நிதி இல்லை. நமக்கு நாமே திட்டத்தில் செய்து தருகிறோம் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர் என குடியிருப்போர் புலம்பி வருகின்றனர். குழா ய் பதிக்க தோண்டிய ரோடு மு ரு கன், ஆனந்தநகர், கொடுவிலார்பட்டி: ஒரு தெருவில் ரோடு அமைத்திருந்தனர். ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிப்பதற்காக அந்த ரோட்டை சில ஆண்டுகளுக்கு முன் பள்ளம் தோண்டினர். ஆனால் இப்போது வரை ரோடு சீரமைக்க வில்லை. மழை பெய்தால் மழை நீர் தேங்கி விடுகிறது. பலரும் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சிரமமாக உள்ளது. மழைநீர் வெளியேற வசதியின்றி இரண்டு, மூன்று நாட்கள் தேங்கி விடுகிறது. ஊராட்சி சார்பில் குப்பை வாங்க, கொசுமருந்து தெளிக்க வருவதில்லை. மழைகாலத்தில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பலரும் பாதிப்படைகின்றனர். ரோடு வசதி ஏற்படுத்திட வேண்டும். கழிவு நீரை வீட்டில் தேக்கும் அவலம் சினேகா, ஆனந்த நகர், கொடுவிலார்பட்டி: தெருவில் சாக்கடை வசதி இல்லாததால் பலரின் வீடுகளுக்கு முன் சாக்கடை செல்கிறது. சிலர் வீடுகளுக்கு முன் பள்ளம் தோண்டி கழிவு நீரை விடுகிறோம். மழைகா லத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீர் மழைநீரும் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள், பூச்சிகளால் பலரும் பாதிக்கப் படுகின்றனர். வீடுகளுக்குள் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷபூச்சிகள் உட்புகுவது அதிகரித் துள்ளது. இதனால் இரவில் அச்சத்துடன் வெளியில் செல்லும் நிலை உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் வெளியில் செல்ல முடியவில்லை. சாக்கடை, தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.