உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரள அதிகாரிகளை கண்டித்து தீர்மானம்

கேரள அதிகாரிகளை கண்டித்து தீர்மானம்

கம்பம் : முல்லைப்பெரியாறு அணைக்கு தளவாட சாமான்கள் கொண்டு செல்வதை தடுக்கும் கேரள அதிகாரிகளை கண்டித்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்படுகிறது.கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் உத்தமபாளையத்தில் நடந்தது. விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எடுக்கும் தண்ணீரின் அளவை குறைத்து கம்பம் பள்ளத்தாக்கில் நடவு செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும். இதை வலியுறுத்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குழு, கலெக்டரை சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது.முல்லைப்பெரியாறு அணைக்கு தளவாட சாமான்களை கொண்டு சென்ற தமிழக நீர்வளத் துறையின் லாரிகளுக்கு அனுமதி மறுத்த கேரள அதிகாரிகளை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் விஜயராஜன் ( கருங்கட்டான்குளம் ), நாராயணன் (கம்பம் ), ராஜா ( சின்னமனூர் ) உள்ளிட்ட சீலையம்பட்டி , கோட்டூர், வீரபாண்டி விவசாய சங்க தலைவர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை