மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
11 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
12 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
15 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
15 hour(s) ago
பெரியகுளம் : பெரியகுளம் பகுதி வழியாக அகல ரயில்பாதை, கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க கோரி 17 ஊராட்சிகளில் நடந்த கிராம சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன. நேற்று கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தூய்மை பணி, வரவு செலவு கணக்கு, நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்கல், தெரு நாய்களை கட்டுப்படுத்துதல் உட்பட அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 17 ஊராட்சிகளிலும் திண்டுக்கல் முதல் தேனி வரை வத்தலகுண்டு, பெரியகுளம் வழியாக அகல ரயில் பாதை அமைக்க வேண்டும். மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி பெரியகுளம் நகர் பகுதி அல்லது ஒன்றிய பகுதிகளில் அமைக்க வேண்டும். இவ்விரண்டு தீர்மானங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் இரு தீர்மானங்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கவனிக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
11 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago