முல்லைப்பெரியாற்றின் வெள்ள நிலை வருவாய் துறை தொடர் கண்காணிப்பு
கம்பம் : முல்லைப பெரியாற்றில் வெள்ள நிலையை தொடர்ந்து கண்காணித்து, திடீர் வெள்ளம் ஏற்பட்டால் சமாளிக்க - தேவையான நடவடிக்கைகளை வருவாய் துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மாலையில் இரவிலும் மழை பெய்து வருகிறது. மழையால் சேதம் ஏற்பட்டால் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.பொதுப்பணித்துறை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பிற துறைகளையும் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.வருவாய் துறையினர் முல்லைப்பெரியாற்றின் நீர் வரத்தை கண்காணித்து வருகின்றனர்.லோயர் கேம்பிலிருந்து தேனி வரை முல்லைப் பெரியாற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களை எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக சலவை தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.வி.ஏ.ஓ., க்கள், கிராம உதவியாளர்கள் ஆபத்தான இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேகமலையில் கன மழை பெய்து வருவதால் மரங்கள் விழுவது, மண் சரிவு ஏற்படும் என்பதால் வனத்துறை.நெடுஞ்சாலைத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஹைவேவிஸ் பகுதியில் தொடர் மழை காரணமாக சண்முகா நதி அணைக்கு நீர் வரத்து துவங்கி உள்ளது. விநாடிக்கு 3 கனடி வரத்து உள்ளது. அணையின் நீர் மட்டம் 45 அடியாக உள்ளது.