உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வி.ஐ.பி.,க்கள் செலவிற்கு நிதி ஒதுக்க கோரி ஆக. 30 முதல் காத்திருப்பு போராட்டம் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு

வி.ஐ.பி.,க்கள் செலவிற்கு நிதி ஒதுக்க கோரி ஆக. 30 முதல் காத்திருப்பு போராட்டம் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு

தேனி:மாவட்டத்திற்கு வி.ஐ.பி.,க்கள் வரும் போது அவர்களுக்கு செலவு செய்ய உரிய நிதி ஒதுக்க கோரி ஆக., 30 முதல் தேனியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் கூறியதாவது: மாவட்டத்திற்கு முக்கிய வி.ஐ.பி.,க்கள் வருகையின் போது அவர்களை கவனித்து கொள்ள தொடர்பு அலுவலரை நியமித்து அவர் மூலம் வசதி மற்றும் செலவு செய்கின்றனர். செலவு தொகை குறித்து கலெக்டர் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டால் நிதி அளிக்காமல் மிரட்டுகிறார். வி.ஐ.பி.,க்களுக்கு செலவு செய்ய உரிய நிதி ஒதுக்க வேண்டும். அலுவலக வழக்கு தொடர்பாக செல்லும் போது அரசு வழக்கறிஞர் கட்டணத்தை தவிர்த்து அலுவலர்களிடம் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இதனை தவிர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் முதுநிலை பட்டியல் வெளியிடுவதில் தொடரும் சிக்கலால் 11 துணை தாசில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பதிவு எழுத்தர் முதல் சீனியர் ஆர்.ஐ., வரை பதவி உயர்வு பெற முடியாமல் தவிர்க்கின்றனர். சில கோரிக்கைகள் தொடர்பாக இருமுறை கலெக்டரிடம் மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போதும் மனு அளித்துள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாளை(ஆக.,30) முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ