மேலும் செய்திகள்
குடிநீர் வராததை கண்டித்து கிள்ளை அருகே மறியல்
22-Sep-2024
கடமலைக்குண்டு : பொன்னம்படுகை கிராமத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்திற்கு மூல வைகை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. சில மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லை.இதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை இல்லை. இதனால் ஐந்து நாட்களாக குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். நேற்று குடிநீர் வழங்க வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் குமணன்தொழு - மயிலாடும்பாறை ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை பி.டி.ஓ., முருகேஸ்வரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.உரிய நடிவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
22-Sep-2024