உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழிப்பறி: வாலிபர் கைது

வழிப்பறி: வாலிபர் கைது

தேனி : தேனி பழனிசெட்டிபட்டி கணேஷ் 41. ஆண்டிபட்டியில் உள்ள ஓட்டலில் கணக்காளராக பணிபுரிந்தார். இவர் தேனி புது பஸ் ஸ்டாண்ட் வழியாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது இரு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கணேஷ், ஓட்டி வந்த டூவீலர், அலைபேசி, ஏ.டி.எம்., கார்டு, பணம் ரூ.200 உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர். கணேஷ் தேனி போலீசில் புகார் அளித்தார். இவரது புகாரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பெரியகுளம் சின்னமணியை 24, கைது செய்தனர். அவரிடமிருந்து டூவீலரை மீட்டனர். மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை