ரவுடியை கொலை செய்து உடல் காட்டில் வீச்சு
மூணாறு: மூலமற்றம், வாகமண் ரோட்டில் வீசப்பட்ட உடல் ரவுடி சாஜன்சாமுவேல் என தெரியவந்தது. கேரளா, கோட்டயம் மாவட்டம் மேலக்காவு பகுதியை சேர்ந்தவர் சாஜன்சாமுவேல் 47. கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக வலம் வந்தார். அவர், ஜன. 29 முதல் காணாமல் போனதால் மேலக்காவு போலீசில் தாயார் புகார் அளித்தார். இந்நிலையில் இடுக்கி மாவட்டம் மூலமற்றம் , வாகமண் ரோட்டில் தேக்குமரக்காட்டு பகுதியில் சாஜன் சாமூவேலின் உடல் பாயில் சுற்றிய நிலையில் கிடந்தது. இவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.தொடுபுழா டி.எஸ்.பி. இம்மானுவேல் பால், காஞ்சியாறு இன்ஸ்பெக்டர் ஷியாம்குமார் தலைமையில் தனிப்படை விசாரணை நடத்தினர். இதில் கோதமங்கலத்தில் தனியார் பாரில் 2018ல் பினுசாக்கோ 27, என்பவரை சாஜன்சாமூவேல் கொலை செய்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கோட்டயம், பொன் குன்னம், பாலா, காஞ்சிராபள்ளி, எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம், மூவாற்றுபுழா, இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனை, முட்டம், தொடுபுழா ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.