உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.1.78 கோடி அபராதம்

விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.1.78 கோடி அபராதம்

தேனி, : மாவட்டத்தில் 2023ம் ஆண்டில் விதிமீறி இயக்கிய வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகம் மூலம் ரூ.1.78 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லாரி, கார் உட்பட 455 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் வீதிமீறி இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் லாரிகள் 5596, கார்கள் 2115, ஆட்டோக்கள் 1466 உள்ளிட்ட 16,137 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விதி மீறிய இயக்கிய 3297 வாகனங்கள் கண்டறியப்பட்டது. மேலும் 455 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது. இவ் வாகனங்களுக்கு அபராத வரியாக ரூ.37.15 லட்சம், அபராத கட்டணமாக ரூ.1.40 கோடி என மொத்தம் ரூ.1.78 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இயக்குவதற்கு தகுதியற்ற வாகனங்களாக 42 வாகனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. உரிய உரிமங்கள் இன்றியும், விதிமீறியும் இயக்கப்பட்ட 45 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது. அதிக நபர்களை ஏற்றி சென்றதாக 181 ஆட்டோக்கள், 293 கார்கள், அதிக பாரம் ஏற்றி சென்ற 136 லாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை