உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

பெரியகுளம்: ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் உட்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, சிலுக்குவார்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி ஜெயந்தி 43. கூலி வேலை செய்கிறார். இவரது மகன் ரிச்சர்ட் தர்மராஜ்க்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக உத்தமபாளையம் தாலுகா, கே.கே.பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் 44.தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி- காமக்காபட்டி ரோட்டில் ரமேஷ் நடத்தி வரும் 'எய்ம் அகடாமி' பயிற்சி பள்ளியில் ரமேஷ், அங்கு பணிபுரியும் மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சேர்ந்த நவீன்குமார் 45. இருவரும் ஜெயந்தியிடம் இரு தவணைகளாக ரூ. 3 லட்சம் பெற்றுள்ளனர். பணத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளனர். ஜெயந்தி புகாரில், தென்கரை எஸ்.ஐ., கர்ணன் ரமேஷ், நவீன்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை