மேலும் செய்திகள்
புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு
25-Oct-2026
தேனி: தேனியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. பங்களாமேட்டில் ஊர்வலத்தை பாலசங்கா நிறுவனர் கதிரேசன் துவக்கி வைத்தார். ஊர்வலம் மதுரை ரோடு, நேரு சிலை, பெரியகுளம் ரோடு, சமதர்மபுரம், பாரஸ்ட் ரோடு வழியாக பங்களாமேட்டில் நிறைவடைந்தது. தொடர்ந்து பொது கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வழக்கறிஞர் செந்தில் பாண்டியன் தலைமை வகித்தார். விபாக் சஹ பவுதிக் ப்ரமுக் சிவக்குமார், ஜில்லா சஹ கார்யவாஹ் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். சித்பவாநந்தா ஆசிரம சுவாமிகள் ஞானசிவாநந்தா, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், ஹிந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் ஊர்வலம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
25-Oct-2026