மேலும் செய்திகள்
பி.டி.ஓ., மீது நடவடிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்
19-Sep-2024
தேனி: அமைச்சர் உதயநிதி ஆய்வு கூட்டத்தில் முறையான பதில் அளிக்க வில்லை என சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் பி.டி.ஓ., சஸ்பெண்ட் செய்தும், மதுரையில் பி.டி.ஓ., வை பணிமாறுதல் செய்யப்பட்டனர். இதனை ரத்து செய்ய கோரி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போடியில் மாவட்ட நிர்வாகிகள் முனிராஜ், சரவணன், உத்தமபாளையத்தில் ரவிச்சந்திரன், செல்லராஜா, சின்னமனுாரில் அர்ஜூனன், துவாஸ், தேனியில் சேதுபதி, மகேஸ்வரி, மயிலாடும்பாறையில் முன்னார் நிர்வாகி ரவிச்சந்திரன், பெரியகுளத்தில் ஜெயசீலன், கம்பத்தில் உடையாளி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர்.
19-Sep-2024