உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கனவு இல்ல திட்டத்தில் அரசியல் நெருக்கடி தவிர்க்க ஆர்ப்பாட்டம்; ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் முடிவு

கனவு இல்ல திட்டத்தில் அரசியல் நெருக்கடி தவிர்க்க ஆர்ப்பாட்டம்; ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் முடிவு

தேனி : அரசியல் நெருக்கடியை தவிர்க்க வலியுறுத்தி க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் அக்.,23ல் ஆர்ப்பாட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் செல்லராஜா தலைமை வகித்தார். செயலாளர் தாமோதரன், பொருளாளர் அர்ஜூனன், இணைச்செயாளர்கள் சக்திமுருகன், ரெங்கநாதன், சரவணன், துவாஸ், நிர்வாகிகள் சின்னசாமி, முனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பணி மாறுதல்களில் அரசியல் தலையீடுகளை தவிர்க்க கலெக்டரிடம் கடிதம் அளிப்பது, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் வழங்கப்படும் அரசியல் நெருக்கடிகளை தவிர்க்க கோரி அக்.,23ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது, நவ.,ல் மாவட்ட மாநாடு நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி