உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சபரிமலை விமான நிலையம் கேரள அரசு நிர்வாக ஒப்புதல்

சபரிமலை விமான நிலையம் கேரள அரசு நிர்வாக ஒப்புதல்

சபரிமலை: சபரிமலை பக்தர்களுக்காக விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. எருமேலியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு மத்திய அரசு அனுமதியும் பெறப்பட்டது.எருமேலி அருகே மணிமலா பகுதியில் செருவள்ளி எஸ்டேட்டில் 916.27 ஹெக்டேர் நிலமும், அதை ஒட்டி 121.876 ஹெக்டேர் தனியார் நிலமும் கையகப்படுத்தப் பட உள்ளது. இந்நிலையில் சபரிமலை விமான நிலைய திட்டத்திற்கு கேரள மாநில அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி உள்ளது.இதனால் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.முதலில் நிலம் கையகப்படுத்துவது பற்றி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். பின்னர் கட்டடம், நிலம், சொத்துக்களின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்படும். அதன் பின்னர் விமான நிலையத்திற்கான பணிகள் தொடங்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை