உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.12.92 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை

ரூ.12.92 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை

தேனி: மாவட்டத்தில் விதிமீறி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.12.92 லட்சம் மதிப்பிலான 737 கிலோ விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டன. தேனி மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை செய்யும் அரசு, தனியார் விற்பனை மையங்களில் விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குநர் வளர்மதி தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, காய்கறி பயிர்களின் 98 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை அரசு விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டன. விற்பனை மையங்களில் பதிவேடுகள், கொள்முதல், விற்பனை ஆவணங்கள் பராமரிக்க வேண்டும். விற்பனைக்கு ரசீது வழங்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன. விற்பனை நிலையங்களில் ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் விதிகளை மீறி வைக்கபட்டு இருந்த ரூ.12.92 லட்சம் மதிப்பிலான 737 கிலோ விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டன. சில கடைகளுக்கு உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ஆய்வின் போது மதுரை, தேனி மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் சிங்காரலீனா, விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி