சலூன் கடை ஊழியர் இறப்பு
மூணாறு: மூணாறில் லட்சம் நகரில் வாடகை வீட்டில் வசித்த தமிழகம் திருநெல்வேலியை சேர்ந்த சலூன் கடை ஊழியர் மகாராஜன் 32. இவர் மாட்டுபட்டி ரோட்டில் சலூன் கடையில் வேலை செய்து மூன்று பேர் லட்சம் நகரில் வாடகை வீட்டில் வசித்தனர். நேற்று முன்தினம் காலை மகாராஜன் வழக்கம்போல் படுக்கையை விட்டு எழுந்திருக்காத நிலையில் சலனமற்று கிடந்தார். அவரை உடனிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாராஜனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.