உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புறக்காவல் நிலையம் மூடப்பட்டதால் வராகநதியில் மணல் திருட்டு தாராளம்

புறக்காவல் நிலையம் மூடப்பட்டதால் வராகநதியில் மணல் திருட்டு தாராளம்

தேவதானப்பட்டி: பொம்மிநாயக்கன்பட்டி புறக்காவல் நிலையம் மூடியதால் வராக நதியில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்டது ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன். இந்த போலீஸ் ஸ்டேஷன் எல்கையான பொம்மிநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. காலை, இரவு என தலா ஒரு போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர். இதனால் பொம்மிநாயக்கன்பட்டி, நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, ஏ.வாடிப்பட்டி வரை 20 கி.மீ., துாரத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை கட்டுக்குள் இருந்தது. சில மாதங்களாக இரவு காவலை தவிர்த்து, காலை மட்டுமே செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையம், தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனால் வராக நதியில் மணல் திருட்டு, 24 மணி நேரம் மது விற்பனை என, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு மீண்டும் 24 மணி நேரம் புறக்காவல் நிலையம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !