மேலும் செய்திகள்
பள்ளி விளையாட்டு விழா மாணவர்கள் அசத்தல்
27-Jan-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமையில் நடந்தது. பள்ளி நிர்வாகி தமயந்தி, செயலாளர் மாத்யூஜோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனுப்பபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நட்சத்திர விஜயகலா தேசியக் கொடி ஏற்றினார். ஒலிம்பிக் கொடியை ஆசிரியை ஹேமலதா, பள்ளி கொடியை பாஸ்டர் விஜிலா ஆகியோர் ஏற்றினர். ஆண்டிபட்டி சி.எஸ்.ஐ., சர்ச்சில் இருந்து ஒலிம்பிக் தீபம் மாணவர்களால் தொடர் ஓட்டமாக பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாணவர்களின் அணி வகுப்பு மரியாதை நடந்தது. பள்ளி மாணவ, மாணவிகள் கராத்தே, சிலம்பம், யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மாணவர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டிகளுக்கும் போட்டி நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு வழக்கறிஞர் உதயகுமார் பரிசுகள் வழங்கினார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா உட்பட பலர் செய்திருந்தனர்.
27-Jan-2025