உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி விளையாட்டு விழா

பள்ளி விளையாட்டு விழா

தேனி; தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவிற்கு பள்ளி செயலாளர் ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார். தேசிய கொடியை கோகுல் ஏற்றினார். ஒலிம்பிக்கொடியை கோகுலகண்ணன் ஏற்றினார். பள்ளிக்கொடியை தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி ஏற்றினார். சங்க துணைத்தலைவர் பாண்டியராஜன், பொதுச்செயலாளர் மகேஸ், இணைச்செயலாளர் ராஜமன்னார், நிர்வாக குழு உறுப்பினர்கள், பள்ளி இணைச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர்கள் முருகன், ராம்குமார் பங்கேற்ற னர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் சுருளிவேல்ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !