தேசிய கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
கம்பம்: தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் கம்பம் பகுதி பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தஞ்சை பெரியார் பல்கலையில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் கட்டா பிரிவில் கம்பம் ஆர். ஆர். இன்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் யோகிதா முதலிடத்தையும், மித்ரன், லிங்கேஸ், ராஜவேல் ஆகியோர் இரண்டாம் இடத்தையும், சௌமி , குருதர்ஷன், லோகித், மோகித், உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக் பள்ளி மாணவர் ஹரி வேலன், கம்பம் ஆன்ஸ் பள்ளி ஹரினேஸ் ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர். குமிட் டே பிரிவில் கூடலூர் என்.எஸ்.கே.பி. பள்ளி பரணிதரன், கம்பம் ஆர்.ஆர் பள்ளி மித்ரன், ராஜவேல் இரண்டாம் இடம் பெற்றனர். சி.பி.யூ. பள்ளி ரோஷன், இஷாக், சூர்யா, கர்ணன் , அல் ஹிக்மா பள்ளி பவின் , ஆர்.ஆர் பள்ளி லோகித் ஆகியோர் மூன்றாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி பரிசு வழங்கினர். பயிற்சியளித்த கங்குலி, முகமது இஸ்மாயில் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.