உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட செஸ் போட்டியில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

மாவட்ட செஸ் போட்டியில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

தேனி : தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். பொருளாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். போட்டிகளை ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா துவக்கி வைத்தார். போட்டிகள் 10, 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடந்தன. பத்து வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தியாஸ்ரீ, ஸ்ரீஆக்னேயா, சர்வேஸ்வர் முதல் மூன்று இடங்களை வென்றனர். பதினைந்து வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் அகிலேஷ், சாத்வீகா, ஸ்ரீகீர்த்திகா முதல் 3 இடங்களை வென்றனர். இளம் செஸ் வீரர்களாக கொடுவிலார்பட்டி கம்மவர் பப்ளிக் பள்ளி சர்வேஷ், போடி சிசம் பள்ளி நிதாஸ்ரீ, கே.லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர் தீபக்ராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மதுரையில் நவ.14ல் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகளை அகாடமி தலைவர் சையது மைதீன் ஒருங்கிணைத்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை