உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளியில் அறிவியல் மாநாடு

பள்ளியில் அறிவியல் மாநாடு

தேனி; அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிகல்வி உதவி திட்ட அலுவலர் மோகன், பள்ளி முதல்வர் மீனாகுமாரி முன்னிலை வகித்தனர். நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்ணை எனும் தலைப்பில் பள்ளி மாணவர்கள் 26 குழுக்கள் தங்கள் ஆய்வுகட்டுரையை சமர்ப்பித்தனர். இதில் 8 மாணவர்கள் பிப்.,1ல் தென்காசியில் நடக்க உள்ள மண்டல மாநாட்டிற்கு தேர்வாகினர். அறிவியல் இயக்க நிர்வாகிகள் நாராயணசாமி, வெங்கட், செல்வமங்கை உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை