உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதை கிடைக்கவில்லை

விதை கிடைக்கவில்லை

பெரியகுளம்:தமிழக அரசு மண்வளம் காக்க 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் பசுந்தாள் உரம் மானிய விலையில் வழங்கி வருகிறது. மண்ணில் கரிம, கார்பன் உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் சரிவிகிதத்தில் இருந்தால் மட்டுமே நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகி,பயிர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். இதனால் மகசூல் அதிகரிக்கும். இயற்கை உரமான பசுந்தாள் உரங்களான தக்கை பூண்டு, சனப்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு கிலோ தக்கை பூண்டு ரூ.105 விலையில் 50 சதவீதம் மானியம் போக கிலோ ரூ.49.75 வீதம் ஏக்கருக்கு 20 கிலோ வழங்க வேண்டும். பெரியகுளம் வட்டாரத்தில் பசுந்தாள் உரங்கள் இன்னும் சப்ளைசெய்யப்படவில்லை. வேளாண் இணை இயக்குனர் பசுந்தாள் உரம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை