உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 10 கிலோ கஞ்சா பறிமுதல்: கைது

10 கிலோ கஞ்சா பறிமுதல்: கைது

கம்பம் : கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் 29, இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து இங்குள்ள கேசவபுரம் கண்மாய் அருகில் மறைத்து வைத்து, சிறு, சிறு பொட்டலம் போட்டு விற்பனை செய்துள்ளார். நேற்று உத்தமபாளையம் மதுவிலக்கு சிறப்பு எஸ்.ஐ.அன்பழகன் தலைமையில் போலீஸ் குழு, கண்மாய் அருகே நின்றிருந்த ரஞ்சித்குமாரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ