டிராக்டர்கள் பறிமுதல்
கடமலைக்குண்டு, : தொப்பையாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 29, நரியூத்தைச் சேர்ந்தவர் பாண்டி 58, இவர்கள் டிராக்டரில் செங்குளம் கண்மாயில் மண் அள்ளி சென்றனர். ஆண்டிபட்டி தாசில்தார் இளங்கோ மற்றும் வருவாய் துறையினர் ரோந்து சென்ற போது காலாவதியான அனுமதிச்சீட்டில் மண் அள்ளியது தெரியவந்தது. வருவாய்த் துறையினர் புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.