உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் தமிழக கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

தேனியில் தமிழக கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை 14 வயதிற்குட்பட்ட கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு நடந்தது. இதில் 8 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக கால்பந்து அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு மாநில அளவில் நடந்து வருகிறது. தேனி விளையாட்டு அரங்கில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணித்தேர்வு நேற்று நடந்தது. மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சென்னை உள்ளிட்ட 8 மண்டலங்களில் இருந்து தலா 11 மாணவிகள் வீதம் 88 பேர் தேர்வில் பங்கேற்றனர். இவர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடந்தது. போட்டிகளை பள்ளிகல்வித்துறை உடற்கல்வி இயக்குனர் குபேந்திரன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.போட்டிகள் முடிவில் 18 மாணவிகள் தேர்வு செய்யபட உள்ளனர். இன்று 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கபடி அணி தேர்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை