கருத்தரங்கம்
தேனி: தேனியில் தோட்டக்கலைத்துறை சார்பில் தென்னை சாகுபடி கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். கருத்தரங்கில் தென்னையில் பூச்சி நோய் கட்டுபாடு, நடவு முறைகள், அதிக மகசூல் பெறுவது உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது. வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி, துணை இயக்குநர்கள் நிர்மலா(தோட்டக்கலை), சுரேஷ்(வேளாண் வணிகம்) உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.