உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை பொருட்கள் வினியோகம் பாதிப்பு

ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை பொருட்கள் வினியோகம் பாதிப்பு

தேனி: மாவட்டத்தில் ரேஷன்கடைகளில்'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது.ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகிக்க பயன்படும் விற்பனை முனையத்துடன் புளூடூத் கருவி மூலம் மின்னனு தராசுகள் இணைக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தராசுகள் விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது.சில பகுதிகளில் 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் வினியோகம் பாதித்தது.பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.சிலருக்கு கைரேகை பதிவாகுவது, கருவிழி பதிவு செய்தில் சிக்கல் நீடித்தது. ரேஷன் கடை பணியாளர்களுக்கும் உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை.கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்வர் பிரச்னை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. ரேகை பதிவு செய்ய முடியாமல் கருவிழி பதிவு செய்பவர்களுக்கு நீண்ட நேரம் ஆகிறது. இப்பிரச்னை தொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ