மேலும் செய்திகள்
மானாவாரி மொச்சை சாகுபடி தொடர் சாரலால் மகிழ்ச்சி
14-Jun-2025
கம்பம்: மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள்ளு , தட்டைப்பயறு சாகுபடியில் மகசூல் மதிப்பீட்டு பணிகளில் வேளாண் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் லோயர்கேம்பில் ஆரம்பித்து போடி வரை ரோட்டிற்கு மேற்கு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மானாவாரி நிலங்களாக உள்ளது. இதில் எள்ளு, மொச்சை, தட்டை, கம்பு, சோளம், மக்காச் சோளம், கொட்டை முந்திரி, உளுந்து உள்ளிட்ட பல வகை எண்ணெய்வித்து பயிர்கள் மற்றும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.இந்தாண்டு மானாவாரி நிலங்களுக்கு தேவையான மழை கிடைத்துள்ளது . சாரல் மழை பெய்து வருகிறது. இதனால்மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள்ளு, தட்டைப் பயறு மகசூல் மதிப்பீட்டு பணிகளில் வேளாண் துறையினர் இறங்கியுள்ளனர்.வேளாண் துறையினர் கூறுகையில் ,' மகசூல் மதிப்பீட்டு பணி நடந்து வருகிறது. எள்ளு, தட்டைப்பயறு சராசரி மகசூல் கிடைத்துள்ளது,'என்றனர்.
14-Jun-2025