மேலும் செய்திகள்
சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் ஓடிய கழிவு நீர்
02-Nov-2024
தேனி: தேனி தாலுகா அலுவலகம் எதிரே மாவட்ட மையம் நுாலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களுக்கு செல்லும் ரோட்டில் சாக்கடையில் கழிவுநீர் செல்ல முடியாதவாறு அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் ஆறாக ஓடியது. நுாலக நுழைவாயில் பகுதியிலும் தேங்கியது. இதனால் நுாலகத்திற்குள் இருந்து பலர் முகத்தை சுளித்து சென்றனர். தாலுகா அலுவலகத்திற்கு வந்தவர்களும் இதே நிலை ஏற்பட்டது. இப் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்ய நகராட்சி சுகாதாரப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
02-Nov-2024