தேனியில் வீடு தேடி உணவு வழங்கும் ஷாரோஸ் சேவை
தேனி: தேனி நகர ஓட்டல்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் சுதாகர் தலைமையில் நடந்தது. மாவட்ட செயல் தலைவர் ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் பொன்முருகன், மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணி, நகரத் தலைவர் கண்ணதாசன், பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்றனர். சுதேசி பொருட்கள் விற்பனையை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளான குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை புறக்கணிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் நலன் கருதி ஓட்டல்களின் விற்பனை விலைக்கே வீடு தேடி சேவை வழங்கும் புதிய திட்டமானஷாரோஸ் சேவை (ZAAROZ service) திட்டம் செப்.7 முதல் தேனியில் துவங்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.