உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேரி மாதா கல்லூரி முதல்வருக்கு கேடயம்

மேரி மாதா கல்லூரி முதல்வருக்கு கேடயம்

தேவதானப்பட்டி; பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வி, சமூக பொறுப்பு மற்றும் சமூகமுன்னேற்றத்திற்கு வழி காட்டும் கல்லூரியாக திகழ்கிறது. இதற்காக தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், கல்லூரிக்கு 'சிறந்த நற்பணி சேவைக்கான பாராட்டுக் கேடயத்தை' கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங் குளத்திற்கு வழங்கி கவுரவித்தார். இவரை கல்லூரி துணை முதல்வர் ஜோசிபரம் தொட்டு, நிர்வாக அலுவலர் பிஜோய் மங்களத்து, மாணவர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை