உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறுவட்ட போட்டிகள் அடுத்த வாரம் துவங்குகிறது

குறுவட்ட போட்டிகள் அடுத்த வாரம் துவங்குகிறது

தேனி: மாவட்டத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அடுத்த வாரம் துவங்குகிறது. போட்டிகளை ஆகஸ்ட் 8க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் 14,17,19 வயதிற்குட்பட்ட குழு விளையாட்டு போட்டிகளான கபடி, ஹாக்கி, கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, பால்பேட்மிட்டன், பேட்மிட்டன், கோ-கோ, கைப்பந்து, எறிபந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போட்டிகள், செஸ், கேரம், டென்னிகாய்ட், சிலம்பம், பீச்வாலிபால், தடகள போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் குறுவட்ட அளவிலும், பின் மாவட்ட அளவிலும் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மாநில போட்டிகளில் பங்கேற்பர்.தேனி மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் குறுவட்ட போட்டிகள் அடுத்த வாரம் துவங்கிறது. போட்டிகளை ஆண்டிபட்டி குறுவட்டத்திற்கு எஸ்.கே.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மயிலாடும்பாறை ராஜேந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மேரிமாதா மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, போடி பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னமனுார் எரசக்கநாயக்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கம்பம் எஸ்.எம்.பி.எம்.,பள்ளி ஆகியவை குறுவட்ட அளவில் போட்டிகளை நடத்த உள்ளன. குறுவட்ட அளவிலான போட்டிகளை ஆக.,8க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்ட அளவிலான போட்டிகளை செப்., இறுதிக்குள் முடிக்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ