உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறுவட்ட போட்டிகள் துவக்கம்; பள்ளி மாணவர்கள் ஆர்வம்

குறுவட்ட போட்டிகள் துவக்கம்; பள்ளி மாணவர்கள் ஆர்வம்

பெரியகுளம்; தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட போட்டிகள் துவங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான 'டி' குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் கூடைப்பந்து போட்டி லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தேவதானப்பட்டி தலைமையாசிரியை தென்றல், உடற்கல்வி இயக்குனர் சித்தார்த்தன் துவக்கி வைத்தனர். 14வயது மாணவர் பிரிவு கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், ஜி.கல்லுப்பட்டி ஆர்.டி.யூ., மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியது. இதில் வி.நி.அரசு பள்ளி முதலிடத்தையும், ஆர்.டி.யூ., பள்ளி 2ம் இடம் பெற்றது. 17 வயது பிரிவில் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், வி.நி.அரசு பள்ளி அணியும் மோதியது. இதில் லட்சுமிபுரம் அரசு பள்ளி முதலிடத்தையும், வி.நி.அரசுபள்ளி 2ம் இடம் பெற்றது. 19 வயது பிரிவில் லட்சுமிபுரம் அரசு பள்ளியும், வடுகபட்டி அரசு பள்ளியும் மோதியது. இதில் லட்சுமிபுரம் பள்ளி வெற்றி பெற்றது. வடுகபட்டி பள்ளி 2ம் இடம் பெற்றது. நேற்று முன்தினம் மாணவிகளுக்கு நடந்த கூடைப்பந்து போட்டியில், 14 வயதுபிரிவில் ஜி.கல்லுப்பட்டி ஆர்.டி.யூ., அணியும், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதியது. இதில் ஆர்.டி.யூ., அணி முதலிடத்தையும், பெரியகுளம் பெண்கள் அரசு பள்ளி 2ம் இடம் பெற்றது. 17 வயது பிரிவில் பெரியகுளம் அரசு பள்ளியும், டி.கள்ளிப்பட்டி செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியது. இதில் பெரியகுளம் பெண்கள் பள்ளி அணி முதலிடத்தையும், செவன்த்டே பள்ளி 2ம் இடம் பெற்றது. 19 வயதுபிரிவு போட்டியில் பெரியகுளம் அரசு பள்ளி முதலிடத்தையும், ஆர்.டி.யூ., அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.கம்பம்: குறு வட்ட போட்டி கம்பம் எம்.பி.எம். மேல்நிலைப்பள்ளி நடத்துகிறது. கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் வாலிபால் போட்டிகள் நடந்தது. 12 பள்ளிகள் பங்கேற்றன. 14 வயது பிரிவு, 17 வயது பிரிவுகளில் கூடலூர் என்.எஸ்.கே.பி. மாணவிகள் முதலிடத்தையும், காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் மேல்நிலைப் பள்ளி 2ம் இடம் பெற்றது. 19 வயது பிரிவில் கஸ்தூரிபாய் மகளிர் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் பெற்றது. உடற்கல்வி ஆசிரியர்கள் ஆசிக், இராதாகிருஷ்ணன் போட்டிகளை நடத்தினார்கள்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ