| ADDED : நவ 16, 2025 04:19 AM
கூடலுார்: கூடலுாரில் கவிஞர் நிருபன்குமார் எழுதிய 'ஹார்மோன்' சிறுகதை தொகுப்பு நூலின் திறனாய்வு நிகழ்ச்சி கிளை நூலகத்தில் நடந்தது. லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கவிஞர் நிருபன்குமார். இவர் கூடலுாரை மையமாக வைத்து ஆறாவது படைப்பாக 26 கதைகள் கொண்டு உருவாக்கப்பட்ட 'ஹார்மோன்' என்ற சிறுகதையை எழுதியுள்ளார். இச்சிறுகதை தொகுப்பினை தடம் நூல் வெளியீட்டு களமும், கூடலுார் வாசகர் வட்டமும் இணைந்து திறனாய்வு நிகழ்ச்சியை நடத்தியது. நகராட்சி தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார். தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை முன்னிலை வகித்தார். நூல் ஆய்வை ஆசிரியர் மோகன் மேற்கொண்டார். புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் குறித்து பூமணம் ராஜா பேசினார். டாக்டர்கள் இன்பசேகரன், செல்வம் ஒருங்கிணைத்தனர். நூலகர் வீருமாரம்மாள் வரவேற்றார். கே.கே. பட்டி நூலகர் சிவராமன், குமார், அருணாதேவி, முத்துச்செல்வி, ஜான் செல்வராஜ், ரவீந்திரன், மாதவன் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.