உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் பொது மக்களை கலங்கடிக்கும் ஒற்றை கொம்பன்கள்: அச்சத்தில் மக்கள்

மூணாறில் பொது மக்களை கலங்கடிக்கும் ஒற்றை கொம்பன்கள்: அச்சத்தில் மக்கள்

மூணாறு : மூணாறு பகுதியில் ஒரு தந்தத்தை கொண்ட ஒற்றைக் கொம்பன் எனும் 2 ஆண் காட்டு யானைகள் பொது மக்களை கலங்கடித்து, அச்சுறுத்தி வருகிறது.இப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளில் படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். தவிர தற்போது ஒரு தந்தத்தை கொண்ட ஒற்றை கொம்பன் எனும் 2 காட்டு யானைகள் பொது மக்களை கலங்கடித்து வருகின்றன. ஒரு யானைக்கு வலது புறம், வேறொரு யானைக்கு இடது புறம் தந்தங்கள் இல்லை. அவை மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் தீவனத்திற்காக பெரும்பாலான நாட்கள் முகாமிட்டு வருகின்றன. அவ்வாறு முகாமிட்ட இரண்டில் ஒரு யானை செப்.25ல் மூன்று துாய்மைப் பணியாளர்களை தாக்கியது. அதில் பலத்த காயம் அடைந்த ராஜீவ் காலனியை சேர்ந்த துாய்மைப் பணியாளர் அழகம்மாள் 58, தற்போதும் சிகிச்சையில் உள்ளார். அதேபோல் குப்பை சேமிப்பு கிடங்கில் நவ.13ல் 15க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென ஒற்றைக் கொம்பன் பாய்ந்து வந்தது. அங்குள்ள கட்டடத்திற்குள் ஓடி தொழிலாளர்கள் உயிர் தப்பினர். ஒற்றைக் கொம்பன் காட்டு யானைகளால் தூய்மை பணியாளர்கள், தோட்ட தொழிலாளர்கள் என அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை