உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுதானிய உணவு திருவிழா

சிறுதானிய உணவு திருவிழா

தேனி: தேனி கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா நடந்தது. நான்காம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் தயாரித்த சிறுதானிய உணவுப் பொருட்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம் போன்ற தானியங்கள் மூலம் தயாரித்த உணவுகள் வைக்கப்பட்டு இருந்தன. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர்கள், ஆசிரியர்கள் சிறுதானிய உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !