மாட்டுபட்டி அணையில் சோலார் படகு இயக்கம்
மூணாறு: மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் படகு பயன்பாட்டுக்கு வந்தது.இந்த அணையில் மாவட்ட சுற்றுலாத்துறை, மின்வாரியத்தின் ஹைடல் டூரிஸம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அவற்றால் தண்ணீர் மாசுபடுவதுடன் படகுகளின் சப்தம் மூலம் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. எரிபொருள் உள்ளிட்ட பராமரிப்பு செலவும் அதிகரிக்கிறது.அதை தவிர்க்க பேட்டரியில் இயங்கும் படகுகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி ஹைடல் டூரிசம் சார்பில் 20 இருக்கைகள் கொண்ட பேட்டரி படகு மே 7ல் பயன்பாட்டிற்கு வந்தது. சோலார் படகு
இங்கு தனியார் பங்களிப்புடன் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அதன்படி கொச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் 30 இருக்கைகளை கொண்ட சோலார் படகு பயன்பாட்டுக்கு வந்தது. சூரிய வெளிச்சம் இல்லாதபோது மின்சாரம் பயன்படுத்தி படகை இயக்கலாம். 20 நிமிட பயணத்திற்கு கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.300.