உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தந்தை ஓட்டிய ஆட்டோவில் தவறி விழுந்து மகன் பலி

தந்தை ஓட்டிய ஆட்டோவில் தவறி விழுந்து மகன் பலி

தேனி : தேனியில் தந்தை ஓட்டிச் சென்ற ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த 3 வயது மகன் பலியானார்.கருவேல்நாயக்கன்பட்டி திருவள்ளுவர் காலனி ஆட்டோ டிரைவர் பரசுராமன் 34. இவரது மனைவி பிரித்திகாஸ்ரீ 25. இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர். இருவரும் வடபுதுப்பட்டி தனியார் பள்ளியில் படிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு மகன்களை பள்ளியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து வந்த தந்தை பரசுராமன், அதிவேகமாக வந்தார். தேனி கலெக்டர் அலுவலக விருந்தினர் மாளிகை பின்புறம் உள்ள வளைவான ரோட்டில் அதிவேகமாக வந்து ஆட்டோவை திருப்பும் போது, ஆட்டோவில் இருந்த மூன்று வயது மகன் தமிழ் இணியன் கீழே விழுந்தான். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். குழந்தை இறந்தது குறித்து தேனி இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம், எஸ்.ஐ., ஜீவானந்தம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை