மகன் மாயம்: தந்தை புகார்
போடி: போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் 35. இவரது மகன் பழனிவேல் 13. இவர் போடி தனியார் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் தாயார் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் அணைக்கரைப்பட்டி அருகே கும்மஞ் சாலையில் உள்ள வயலுக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நிலையில் தந்தை புகாரில் போடி தாலுாகா போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.