உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விநாயகர் சிலை ஊர்வலம் உரிய நேரத்தில் துவங்கி, முடிக்க ஒத்துழைக்க வேண்டும்

விநாயகர் சிலை ஊர்வலம் உரிய நேரத்தில் துவங்கி, முடிக்க ஒத்துழைக்க வேண்டும்

தேனி : மாவட்டத்தில்ஆக.27, 28, 29 ஆகிய நாட்களில் ஹிந்து அமைப்புகள் நடத்தும் விநாயகர் சிலை ஊர்வலம் உரிய நேரத்தில் துவங்கி குறிப்பிட்டநேரத்திற்குள் முடித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். '' என, ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி., சினேஹாபிரியா பேசினார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கான ஆலோசனை கூட்டம் தேனியில் மஹாலில் நடந்தது. எஸ்.பி., தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸாண்டர், டி.எஸ்.பி., க்கள் தேவராஜ், வெங்கடேஷ், சுனில், சிவசுப்பு, நல்லு, பெரியசாமி, தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ.,தீவான்மைதீன், ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., இந்து மக்கள் கட்சி, வி.ஹெச்.பி., நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு பேசியதாவது: புதியவிநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை.10 அடி உயரத்திற்கு மிகாமல் சிலைகள் அமைக்க வேண்டும். சிலை வைத்த3 நாட்களில் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். ஊர்வலத்தின் போது துவங்கும் இடம் முதல் முடியும் வரைஅனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனம், டூவீலர்களில் சிலைகளை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மினிலாரி, டிராக்டரில் மட்டுமேஎடுத்துச் செல்ல வேண்டும். விதிமீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்றார். எஸ்.பி., கூறியதாவது: ஊர்வலம் அமைதியாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்வலத்தை உரிய நேரத்தில் துவங்கி, முடிக்க நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்', என்றார். கூடுதல் பாதுகாப்பு ஆக.27 ல் விநாயகர் சதுர்த்தி அன்று பெரியகுளத்தில் 102 விநாயகர் சிலைகளும், ஆக.28ல் தேனி, ஆண்டிபட்டி, போடி உள்ளிட்ட10 இடங்களிலும், ஆக.29ல் சின்னமனுாரிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடக்க உள்ளன. இதில் பெரியகுளத்தில் 700 போலீசாரும், தேனி உட்பட 10இடங்களில் 1500 போலீசாரும், சின்னமனுாரில் 862 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ