நாளை சிறப்பு முகாம்
தேனி : வேளாண் பொறியியல் துறை சார்பில், தேனி சுக்குவாடன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நாளை (ஜூலை 1ல்) சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முறை பற்றி விவசாயிகளுக்குதுறை அதிகாரிகள், தனியார் நிறுவன அலுவலர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் போன்றவை நேரடியாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.