உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சியில் சிறப்புக் கூட்டம்

ஊராட்சியில் சிறப்புக் கூட்டம்

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய பணியாளர்களுக்கு நன்றிதெரிவித்து சிறப்பு கூட்டம் ஊராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடந்தது.ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், குடிநீர்மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் மக்கள் நல பணியாளர்களை நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.ஊராட்சி துணைத் தலைவர் பிரியா, செயலாளர் சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை