உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பயிற்சி முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பயிற்சி முகாம்

போடி: போடி தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் போடியில் நடந்தது. டி.எஸ்.ஓ., நல்லையா, தாசில்தார்கள் சந்திரசேகர், சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேசியதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது வாக்காளர் விபரங்கள் அடங்கிய படிவங்களை பி.எல்.ஓ.,க்கள் வாக்காளர்கள் வீடு தேடி சென்று வழங்க வேண்டும். போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, இறந்தோர் விபரங்கள் நீக்காமல் இருப்பது குறித்து விபரங்கள் பெற்று உரிய முறையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கிராமங்களில் வாக்காளர்கள் தோட்ட வேலைக்கு சென்று விடுவதால் மாலை நேரங்களில் திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் கல்வி பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் காலை, மாலை நேரங்களில் வீடு, வீடாக சென்று வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். வருவாய்த்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், நகராட்சி, அங்கன்வாடி பணியாளர்கள், அ.தி.மு.க., தி.மு.க., காங்., பா.ஜ., உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை