உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விளையாட்டு விழா துவக்கம்

விளையாட்டு விழா துவக்கம்

உத்தமபாளையம்; உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் எச். முகமது மீரான் வரவேற்றார். 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒட்டம், நீளம், உயரம் தாண்டுதல் கபடி, கிரிக்கெட், கோகோ, கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். தொடர்ந்து ஒரு மாதம் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ