உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மா மரங்களில் மருந்து தெளிப்பு

 மா மரங்களில் மருந்து தெளிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் மா மரங்கள் அதிகம் உள்ளன. தெப்பம்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர் உள்பட பல பகுதிகளில் கல்லா, செந்தூரம், காசா வகை மா மரங்கள் அதிகம் உள்ளன. மாமரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்து, பிஞ்சுகள் காய்த்துள்ளன. பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க விவசாயிகள் அதற்கான மருந்து தெளிப்புடன் தேவையான உரமும் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் இப்பகுதியில் விளையும் மாங்காய் விற்பனைக்கு கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !