உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மா மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

மா மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

பெரியகுளம்: பெரியகுளத்தில் மா மரங்களில் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.பெரியகுளம் பகுதியில் 12 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் செய்யப்படுகிறது. பெரியகுளம், செலும்பு, கோயில் காடு, கும்பக்கரை, ஈச்சமலை, தொண்ட கத்தி, முருகமலை, சோத்துப்பாறை பகுதியில் மாந்தோப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்தப் பகுதிகளில் உரிய காலத்தில் பருவமழை பெய்ததால் மாமரங்களில் பூக்கள் பூத்துள்ளது. இதனை தொடர்ந்து மருந்து தெளிப்பு பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. மாம்பூக்கள் மீது பூச்சிகள் படர்ந்து நோய் தாக்கத்தை தடுக்கும் வகையில் மருந்து தெளிக்கப்படுகிறது.இன்னும் சில வாரங்களில் பூக்கள் பாசியாகவும், அதனை தொடர்ந்து காய்களாகவும் பெருக்கும்.ஏப்.,முதல் ஜூன், ஜூலையில் அறுவடைக்கு வரும். மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய மா விவசாயம் தற்போது விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை