உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் குடியிருப்பில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

போலீஸ் குடியிருப்பில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

பெரியகுளம்: பெரியகுளம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.பெரியகுளம் தென்கரை போலீஸ் குடியிருப்பு வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளது. இங்கு 55 குடியிருப்புகள் உள்ளது. பெரியகுளம், தென்கரை தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் ஸ்டேஷன்களில் பணி புரியும் போலீசார்கள், ஏட்டுகள், ,சிறப்பு எஸ்.ஐ.,க்கள், எஸ்.ஐ.,க்கள் உட்பட 55 குடும்பங்கள் வசிக்கின்றனர்.இப் பகுதி அருகே செல்லும் ரோடு மேடாகவும் போலீஸ் குடியிருப்பு பகுதி தாழ்வாக உள்ளது. சிறுமழை பெய்தாலே மழைநீர் அங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மேன்ேஹால் வழியாக பாதாளசாக்கடை கழிவு நீர் வெளியேறி நடைபாதையில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.அடிக்கடி பிரச்னை: மழை பெய்தால் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரை நகாராட்சி நிர்வாகம் கழிவுநீர் ் உறிஞ்சும் வாகனம் மூலம் அகற்றுகின்றனர். கழிவுநீர் தேங்கும் பகுதியில் கொசு உற்பத்தியால் போலீசார்கள் அவதிப்படுகின்றனர்.நிரந்தர தீர்வு காண வேண்டும்: இங்குள்ள குடியிருப்பு பகுதியில் ஒவ்வொரு போலீசாரும் நகராட்சிக்கு தொழில் வரியாக ஆண்டுக்கு ரூ.2500 செலுத்துகின்றனர். இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1,37,500 செலுத்துகின்றனர். நகராட்சி நிர்வாகம் பாதாளசாக்கடை கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாமல் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை