உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தேனியில் மாநில அளவிலான சிலம்பம், பாக்சிங்

 தேனியில் மாநில அளவிலான சிலம்பம், பாக்சிங்

தேனி: பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் தடகள, குழு விளையாட்டுகள், சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தேனியில், 2026 ஜன., 4 முதல் 7 வரை மாநில சிலம்பம், குத்துச்சண்டை, டென்னிகாய்ட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கல்வித்துறையினர் கூறுகையில், 'போட்டிகள் 14, 17, 19 வயதிற்குட்பட்ட பிரிவில் நடக்கிறது. ஜன., 4, 5ல் மாணவியருக்கும், ஜன., 6, 7ல் மாணவர்களுக்கும் நடக்கிறது. போட்டி நடத்துவதற்கான மைதானங்கள், அடிப்படை வசதிகள், தங்குமிடம், உணவு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை