உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விஜயகாந்திற்கு சிலை: தே.மு.தி.க.,வினர் மனு

விஜயகாந்திற்கு சிலை: தே.மு.தி.க.,வினர் மனு

தேனி: தேனி மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கட்சியினர் கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் மனு அளித்தனர். மனுவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இயற்கை ஏய்தினார். அவருக்கு மாவட்ட தலைநகரங்களில் கட்சி சார்பில் சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விஜயகாந்திற்கு சிலை அமைக்க பொது இடத்தை தேர்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரினர். மாவட்ட அவைத் தலைவர் மாயி, மகளிரணி மாவட்ட செயலாளர் சந்திரமதி, நிர்வாகிகள் சீனிவாசன், தமிழன், ராஜேஷ்கண்ணா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை